பயணிகள் பேரூந்து மீது புலிகள் தாக்குதல்! 15 பொதுமக்கள் பலி பலர் படுகாயம்!

December 6th, 2007

கடந்த இரவு அனுராதபுரம் மாவட்டம் ஜனாகபுரவில் பயணிகள் பேரூந்து மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 15 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும்

வவுனியா மன்னார் மோதல்களில் 10க்கு மேற்பட்ட புலிகள் பலி!

December 5th, 2007

இன்று வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது 10க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி தமிழ் தலைவர்கள் சந்திப்பு!

December 5th, 2007

tpe.jpgகொழும்பில் தமிழர்கள் கைது செய்யப்படுவது மற்றும் வவுனியா கொழும்பு புகையிரத சேவை தொடர்பாக தமிழ்கட்சிகளான த.வி.கூ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும்

கொழும்பில் தமிழர்கள் கைது சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

December 5th, 2007

amnesty-international.jpgகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கு மோதல்களில் 13 புலிகள் பலி!

December 5th, 2007

வடக்கு முன்னரங்க பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மதியம் கிளாலி முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற மோதலின்போது 10 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

புலிகளின் கடத்தல் மைய்யமாகும் கேரளா!

December 5th, 2007

தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோர பகுதிகளை புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ் நகரில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!

December 5th, 2007

யாழ். சின்னக்கடையில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றுக் காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் தண்ணீர்த் தாங்கியடியைச்சேர்ந்த அரியராசா றெக்ஸ் எடிசன் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக்காலை சின்னக்கடைப்பகுதிக்கு பொருட்கள் வாங்கச்சென்ற இவரை மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளே சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

யால சரணலய பகுதியில் படையினர் புலிகள் மோதல்!

December 5th, 2007

யால சரணாலயத்தில் வடக்கு திசையில் அமைந்துள்ள தெமடகலவுக்கும் தெபரதூவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை 5.10 மணியளவில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இம்மோதல் சம்பவத்தில் புலிகள் தரப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் படையினரின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது புலிகள் பின்வாங்கி விட்டனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

அப்பாவி இளைஞர்களை விடுவிக்க வேண்டும் தமிழ்கட்சி தலைவர்கள் கூட்டாக கோரிக்கை!

December 4th, 2007

hindu-logo.gifகடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை தொடர்ந்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழர்கள் வகை தொகையின்றி கைது செய்யப்படுவதற்கு தமிழ்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வவுனியாவில் புலிகளின் புலனாய்வு உறுப்பினர் சுட்டுக்கொலை!

December 4th, 2007

நேற்று அதிகாலை 2:50 மணியளவில் வன்னிபுலிகளின் புலனாய்வு உறுப்பினர் சுகர்தன் என்பவர் வவுனியா பாவற்குளம் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்