இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஒலுவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

April 18th, 2014

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தின் போது அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.
மேலும்

யாழ்.ஆயர் இல்லத்தின் மீது கற்தாக்குதல்!

April 18th, 2014

யாழ்.ஆயர் இல்லத்தின் மீது நேற்று இரவு 7 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் கற்களைக்கொண்டு தாக்குதல் மேற்கொண்டதோடு கதவுகளை அடித்தும், உதைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் ஆயர் இல்லத்தை சூழ குவிக்கப்பட்டதோடு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

April 18th, 2014

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விப்பணிப்பாளர்களுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கூறி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

இறுதிப் போரில் இந்தியாவின் பங்கு பற்றி விசாரிக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!

April 17th, 2014

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவும், இலங்கை போரில் இந்திய இராணுவத்தின் பங்கு குறித்து விசாரிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும்

ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளாத நாடுகளில் இலங்கை 4 வது இடம்!

April 17th, 2014

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்காக முழுமையான விசாரணைகள் நடத்தப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 வது இடத்தில் உள்ளதாக பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுள் இராக், சோமாலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4 வது இடத்தில் இலங்கை காணப்படுகிறது.
மேலும்

தென்னாபிரிக்கா எதற்கு?- நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே போதும் : அடம்பிடிக்கின்றது இலங்கை!

April 17th, 2014

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேசுவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்றது இலங்கை.
மேலும்

நரேந்திர மோடிக்கு ஆதரவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரசாரம்!

April 17th, 2014

பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் 650 பேர், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுட்டுள்ளனர். இந்திய வளர்ச்சிக்கான உலக இந்தியர்கள்” என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் பரத் பராய். இவர், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வைத்தியராக பணியாற்றி வருகிறார்.
மேலும்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து கருத்து வெளியிடுவதில் தவறில்லை : ரவூப் ஹக்கீம்!

April 17th, 2014

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையானது அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று அதன் அடிப்படையில் நாம் கருத்து வெளியிடுவதில் தவறு இல்லை என்று நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

பொலன்னறுவை-வெஹரகல மகா விகாரையின் விகாராதிபதி மீது தாக்குதல்!

April 17th, 2014

பொலன்னறுவை – வெஹரகல மகா விகாரையின் விகாராதிபதி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் நேற்றிரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் போது விகாரையில் இருந்த இன்னுமொரு நபரும் கயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

ஒரே இரவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது : ருவான் வணிகசூரிய!

April 17th, 2014

ஒரே இரவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவல் அமெரிக்காவிற்கு ஏனோ சென்றடையவில்லை.

மேலும்