அடுத்த வருடம் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல்?

April 20th, 2014

ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச்செய்தியல் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து ஊவா மாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தாக்குதலுக்குள்ளான ஐ.தே.கட்சி எம்.பி.க்களால் சிறப்புரிமை மீறல் பிரேரணை!

April 20th, 2014

அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் மாகம்புரத்துறைமுக செயற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற ஐ.தே.கட்சி எம்.பிக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இந்த எம்.பி.க்கள் எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றத்தில் தனித்தனியாக சிறப்புரிமை மீறல் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக ஆர். யோகராஜன் எம்.பி. தெரிவித்தார்.
மேலும்

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன: அமைச்சர் ரிஷாத் பதியுதீன்!

April 20th, 2014

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன.இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும்

வடமாகாண சபைக்கு அரசு போதிய உதவிகளை செய்யவில்லை : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

April 20th, 2014

அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் அரசாங்கம் வடமாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எந்த விடயத்தையும் செய்யவில்லை என்றும் தேசிய மொழிகள் மற்றும் இன நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

தொண்டைமானாற்றில் பெருந்தொகை மீன்கள் இறக்க ஒட்சிசன் பற்றாக்குறையே காரணம்!

April 19th, 2014

தொண்டைமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குல நிலத்திலும் முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை : அமைச்சர் றிசாட் பதியுதீன்!

April 19th, 2014

வில்பத்து தேசிய வனப் பகுதியில் ஒரு அங்குல நிலத்திலேனும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மறிச்சுக்கட்டியில் பரம்பரையாக வாழ்ந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு ஜாசிம் நகர் என்ற பெயரில் 300 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும்

மோசடியில் மகிந்த அரசாங்கம் சாதனை படைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை : எதிர்வு கூறிய பாலித ரங்கே பண்டார!

April 19th, 2014

உலகில் மிகவும் மோசடியான அரசாங்கம் என்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும்

கிளிநொச்சியில் 64 வயது மூதாட்டி சி.ஐ.டியினரால் கைது!

April 19th, 2014

கிளிநொச்சியில் 64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்மாவதி எனும் 64 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மூதாட்டியை தற்போது வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

வன்னி மாவட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

April 19th, 2014

2013 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக காணப்பட்ட போதும் 2013 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 6 ஆக உயர்வடைந்துள்ளது என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
மேலும்

நீர்கொழும்பு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

April 19th, 2014

நீர்கொழும்பில் இடம் பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் தலைமைகள், பொலிஸார், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

மேலும்