யாழ் ஊர்காவற்றுறையில் இருவர் சுட்டுக்கொலை!

May 19th, 2007

ஊர்காவற்றுறை பகுதியில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 3:45 மணியளவில் ஊர்காவற்றுறை புதுக்குடியிருப்பு கடற்பகுதியில் இனந்தெரியாதநபர்களால் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலுக்காக சென்று கொண்டிருந்தபோதே மேற்படி இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் இவர்கள் அதே ஊரை சேர்ந்த 32 வயதுடைய றேபேட் தேவதாஸ், 18 வயதுடைய ஞானரூபன் ய+ட்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-யாழ் நிருபர்

வ.புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்களில் ஜவர் இன்று தமிழகம் திரும்பினர்!

May 18th, 2007

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கேரள கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வன்னிபுலிகளால் கடத்தி செல்லப்பட்ட 12 மீனவர்களில் ஜவர் இன்றையதினம் தமிழகம் திரும்பியுள்ளனர். மேலும் ஆறுபேர் வந்து கொண்டிருப்பதுடன் ஒருவர் மாலைதீவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்றும் தமிழகம் திரும்பியுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களிற்கான அறிவுத்திறன் போட்டி!

May 18th, 2007

peot-1.JPGசுவிஸ்வாழ் தமிழ் மாணவ செல்வங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் நடைபெறவும் இவ் போட்டி நிகழ்ச்சிகளில் பல தமிழ் மாணவ, மாணவியர் போட்டியிட்டு பெறுமதி வாய்ந்த வெற்றி பதக்கங்களை ஆண்டுதோறும் தட்டி செல்வது வழமை. அவ் வரிசையில், 2007ம் ஆண்டுக்கான போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 10ம் திகதி சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.. தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினரின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் அறிவு திறனை பரீட்சிக்கும் இவ் போட்டி நிகழ்ச்சிகளை சுவிஸ் தமிழீழ மக்கள் கல்விக்கழகத்தினர் ஆண்டுதோறும் நடாத்திவருகின்றனர்.
-சுவிஸ் நிருபர்
மேலும்

மட்டக்களப்பில் மோதல் வன்னிபுலிகள் ஜவர் பலி! உடல்கள் படையினர் வசம்!

May 18th, 2007

மட்டக்களப்பு தொப்பிக்கல பகுதியில் இடம்பெற்ற மோதலில் வன்னிபுலிகள் ஜவர் கொல்லப்பட்டுள்ளதுடன். அவர்களது உடல்கள் மற்றும் ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இவ் மோதலின்போதே வன்னிபுலிகள் ஜவர் கொல்லப்பட்டுள்னர். அவர்கள் வசமிருந்த ரி.56 ரக ரைபிள்கள்-5, கைக்குண்டுகள் உட்பட மேலும் சில இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். கைப்பற்றப்பட்ட புலிகளின் உடல்கள் மகா ஒயா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புலிகளின் தொலைத் தொடர்பினை இடைமறித்து கேட்டபோது புலிகள் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் கொக்குவில் பகுதியில் படையினர் தேடுதல்!

May 18th, 2007

நேற்று அதிகாலை 5:00 மணிமுதல் காலை 10:00 மணிவரை கொக்குவில் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள ஆடியபாதம் வீதி, கொக்குவில் பொற்பதி வீதி, கோண்டாவில் மற்றும் கொக்குவில் பகுதியில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான படையினரும், பொலிஸாரும் கூட்டாக மேற்கொண்ட தேடுதலில் வீடுகள் ஒவ்வொன்றும் தேடுதலிற்கு உள்ளாக்கப்பட்டதுடன். வீடுகளில் இருந்தோர் நந்தாவில் அம்மன் கோயிலுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
-யாழ் நிருபர்

ஜனாதிபதி ஜோர்டான் பயணம்!

May 18th, 2007

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது துணைவியார் சிராந்தி ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் றோகித போகல்லாகம ஆகியோருடன் ஜோடானுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக ஜோர்டான் சென்றடைந்துள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் குயின் அலிய சர்வதேச விமானநிலையத்தை நேற்றிரவு சென்றடைந்தனர். இவர்களை ஜோர்டானிய மக்கள் தொடர்பு மற்றும் வீடமைப்பு துறை அமைச்சர் Hosni Abu Gheida வரவேற்றார்.

புலிகளின் ஆயுத கப்பல் மாலைதீவு கடற்படையினரால் மூள்கடிப்பு!

May 17th, 2007

வன்னிபுலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்றினை மாலைதீவு கடற்படையினர் மூள்கடித்துள்ளனர். இன்று காலை 8:25 மணியளவில் மாலைதீவு கடற்பிராந்தியத்தில் வைத்து இவ் ஆயுத கப்பலை தாக்கியழித்துள்ளதாக மாலைதீவு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான மேற்படி ஆயுத கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டபோது சிலர் அவ் கப்பலில் இருந்து கடலிற்குள் குதித்து உயிர்காக்க முயன்றனர் அப்போது அவர்களில் ஜவரை தாம் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தான் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக மாலைதீவு அரசு அறிவித்துள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

படையினர் புலிகள் மோதல்: பலியான புலிகளின் உடல்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிப்பு!

May 17th, 2007

மடு முன்னரங்க பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதலில் வன்னிபுலிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன். படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது வன்னிபுலிகளின் மூன்று உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியதாக படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக புலிகளிடம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். இதேவேளை இன்றையதினம் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மேலும் ஆறு உடல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் கைப்பற்றப்பட்ட உடல்கள் இன்றையதினம் செஞ்சிலுவை சங்கம் ஊடாக புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-வவுனியா நிருபர்

புலிகளால் கடத்தப்பட்டவர்களை தேடாத பாதிரிமார்: யாழில் காணமல் போன பினாமி புலிகளைத் தேடி இராணுவ தளபதியுடன் சந்திப்பு!

May 17th, 2007

2005_joseph-prist.jpgயாழில் காணமல்போன புலி ஆதரவு மாணவர்களை தேடும் முயற்சியில் பாதிரிமார் இறங்கியுள்ளனர். இவ்விடயமாக தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையிலான ஜவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு யாழ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் கடந்த காலங்களில் வெண்ணிறைபூண்ட பாதிரிமார் கூட்டம் வன்னியில் தமிழ்செல்வனின் காலடியில் மண்டியிட்டு அவரின் அறிவுரைகளை கேட்டு வெளிநாடுகளுக்கு “ஒதல்“ செய்து வந்தார்களேயன்றி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லீம் அப்பாவி பொதுமக்களைப்பற்றியோ, மாணவர்கள் பற்றியோ தமிழ்செல்வனிடம் வாய் திறக்காமல் மௌனமாக இருந்தார்கள்.
மேலும்

வன்னிபுலிகளின் சுவிஸ் பொறுப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

May 17th, 2007

கடந்த 1ம் திகதி மேதின ஊர்வலத்தில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதன் பிரகாரம் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குலம் என்ற செல்லையா குலசேகரசிங்கம் மற்றும் புலிகளின் இளைஞர் அமைப்பின் பேர்ண் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான செல்வராசா வைகுந்தன் ஆகியோரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் சுவிஸ் சூரிச் மாநிலத்தின் கிரிமினல் நீதிமன்றத்திற்கு முதல் முறையாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேலும்