சிதம்பரம், மணிசங்கர், சிவசங்கர் மேனனுடன் சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் சந்திப்பு!

December 26th, 2007

புதுடில்லிக்கு விஜமொன்றை மேற்கொண்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும்

நெடுந்தீவு கடற்பரப்பில் மோதல் புலிகளின் ஆறுக்கு மேற்பட்ட படகுகள் தாக்கியழிப்பு!

December 26th, 2007

இன்று காலை கடற்படையினருக்கும் வன்னிபுலிகளின் கடற்புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றின்போது புலிகளின் ஆறுக்கு மேற்பட்ட படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7:30 மணியளவில் நெடுந்தீவுக்கு தெற்கே இடம்பெற்ற இவ் மோதலின்போது புலிகளின் ஆறுக்கு மேற்பட்ட படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது 40 வரையிலான புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

கைது செய்யப்பட்ட பிரான்ஸ் செய்தியாளர்கள் விடுதலை!

December 26th, 2007

கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட பிரான்ஸ் செய்தியாளர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ப+சா தடுப்பு முகாமை படம் பிடிக்க முனைந்ததன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி பேரலையின் மூன்றாவது ஆண்டு!

December 26th, 2007

சுனாமி பேரலை தெற்க்காசியாவை தாக்கிய மூன்றாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இலங்கை உட்பட இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உட்பட சில தெற்காசிய நாடுகளை சுனாமி தாக்கியதன் நினைவுதினம் இன்று நினைவு கூரப்படுகின்றது.
மேலும்

இராணுவ முகாமை படம் பிடித்த பிரான்ஸ் செய்தியாளர் கைது!

December 25th, 2007

இராணுவ முகாமை புகைப்படம் எடுத்த பிரான்ஸ் நாட்டு செய்திhளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை ரத்கம பகுதியில் உள்ள இராணுவ முகாமை படம் பிடித்தபோதே மேற்படி செய்தியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கில் உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது சபைகளுக்கு வேட்பு மனுகோரல்!

December 25th, 2007

கிழக்கு மாகாணத்தின் ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

அமரர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 20வது சிரார்த்ததினம்!

December 24th, 2007

mgr.jpgதமிழக முன்னால் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 20வது சிரார்த்ததினம் இன்றாகும். இலங்கையின் கண்டியில் நாவலப்பிட்டிய என்ற இடத்தில் ஜனவரி 17.1917ம் ஆண்டு பிறந்த மருதூர் கோபால ராமச்சந்திரன், தமிழக முதல்வராக பதவியேற்று அரசியலில் சாதனை படைத்தவர். தமிழீழ போராட்டத்திற்கு தமிழக மக்களின் தார்மீக ஆதரவை ஒன்றுதிரட்டி பல்வேறு விதங்களில் உதவிகளை வழங்கியவர். ராஜீவ்காந்தி இறக்கும்வரை இருந்த அமோக ஆதரவுக்கு வித்திட்ட தமிழ் தாயின் தலைமகன் அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆவார். அதன் பின்னர் வன்னிபுலிகளின் மனிதக்குண்டினால் ராஜீவ்காந்தியின் கொலையோடு தமிழக மக்களின் ஆதரவும் சிதறுண்டு போனது.
மேலும்

இந்திய தலைவர்களுடன் தமிழ்கட்சி தலைவர்கள் சந்திப்பு!

December 24th, 2007

இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள தமிழ்கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னர்கள் தொடர்பாகவும் இந்திய தலைவர்களுக்கு எடுத்துரைத்து வருவதுடன் நீண்டகால இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

வவுனியா மன்னார் மோதல்களில் 10க்கு மேற்பட்ட புலிகள் பலி!

December 24th, 2007

வவுனியா மற்றும் யாழ் முன்னரங்க பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 10 புலி உறுப்பினர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் புலிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்த வேண்டும்-ஈ.வி.கே.இளங்கோவன்!

December 23rd, 2007

elngo-2007.jpgதமிழகத்தில் புலிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்தவேண்டும் என இணை அமைச்சர் ஈ.வி.கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இடம்பெற்ற சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துளளார்.
மேலும்