வன்னியுத்தத்தில் ஈடுபட்ட முக்கிய படையணி தளபதிகளில் ஒருவரான ஜெகத் டயஸ் வாகன விபத்தில் படுகாயம்!
July 14th, 2009
Save & Share
வன்னியை மீட்கும் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ படையணியின் தளபதிகளில் ஒருவரான ஜெகத் டயஸ் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார். கடந்த இரவு கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
