நெருப்புக்கு வந்தமடல்:இலங்கை தமிழ் மக்களும், நடிகருலகமும்!
இலக்கை தமிழ் மக்களைப் பற்றி ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இரண்டு தரப்பாக செயற்படுவதால் எது உண்மை எனக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும், ஏதோ ஒன்று நடப்பதால்தான் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அங்கே தமிழ் மக்கள் அல்லல்படுகிறார்கள் என அறிகிறோம். யாராக இருந்தாலும், மனிதன் என்ற அடிப்படையில் மனம் உருகாமல் இருக்கவும் முடியாது. இதில் ஆச்சரியம் என்னவெனில், சிலரது துன்பத்தில் பேறு சிலர் இலாபம் தேட முனைகிறார்களே!!!!!
இலங்கை தமிழினம் எனக்கூறி, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே வெடித்துள்ளது. திலையுலகத்தினரும் கூட தங்கள் நடிப்புகளை எடுத்துக் கொண்டு மக்கள் முன்வந்தவிட்டனர். பொதுவாக இந்திய அரசியலை கையில் எடுத்தவர்களில் பெரும்பாலானோர் நடிகர்கள். அரசியலுக்கு வந்த பிற்பாடு சிலர் அரசியலையே நாடக மேடையாக ஆக்கினர். இன்னும் சிலர் அரசியலையும், திரையையும் தங்களுக்கு மேடையாக பயன்படுத்துகின்றனர்.
இலங்கை தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் துன்பத்தில் இருக்கிறார்கள் என்றால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முன்வந்துவிட்டார்கள். மூன்று வேளை உணவுக்கு வழி இல்லாவிட்டாலும் இவர்களின் படத்துக்கு பணம் கொடுக்க முன்வருபவர்கள்தான் தமிழர்கள். இதனை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் மொத்த உணவுக்குமே மக்கள் கஷ்டப்பட்டால் தங்கள் படத்தைப் பார்ப்பதற்கு ஆட்கள் குறைந்தவிடும் என்பதற்காக தெருவில் இறங்கிவிட்டார்கள்.
இவர்களெல்லாம் அறிந்துகொள்வதற்காக:
இலங்கையை பற்றி ஒரு சகோதரிடம் உரையாடிய போது அவர் உள்ளத்தில் இருந்து வந்த குமுரலை தருகிறேன். தம்பி! மனிதன் என்ற ரீதயில் கவலை கொள்ளத்தான் வேண்டியிருக்குது. எவர் என்றாலும் எமக்கு விபரீதம்தான். ஆரசாங்கம் என்றாலும், புலிகள் என்றாலும் முஸ்லிம்களைக் கவனிக்கமாட்டார்கள். கவனிக்காது விட்டால் கூடக் பிரச்சனை இல்லை. அவர்களால் ஆபத்து வரக்கூடாது. இன்று சிங்களவர்கள் அடிக்கிறார்கள், தமிழ் மக்களை அழிக்கறார்கள் என்று எங்கும்
போராட்டம் நடக்கிறது. அது மட்டுமன்றி, உலக உணவுத் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. இதன் பின்னர், அரசா, புலிகளா என்பது இரண்டாம் கட்டம். ஆனால் ஒன்றை சிந்தித்துப் பாருங்கள்.
இன்று எவ்விடத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள் என்று கேள்வியுறுகிறோமோ அவ்விடத்தில் இருந்துதானே 1991ல் நமது முஸ்லிம்களும் உடுத்த உடையுடன் துறத்தப்பட்டார்கள். இன்று உலக உணவுத் திட்டம் என உதவிகள் கிடைக்கிறது. அன்று அவர்களுக்கு யார் உதவினார்கள்?. அவர்களைப் பற்றி உலகத்தில் எங்கு பேசினர். கவலைப்பட்டனர்? தெருவில் அலைந்து திரிந்தார்களே!!! இலட்சக் கணக்கில் சொத்துக்கு உரிமையாளர்கள் திண்ணுவதற்கு உணவின்றி, குடிப்பதற்கு நீரின்றி அலைந்தவர்கள் எத்தனை பேர். அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல பஸ்ஸ{க்குக்கூட பணமின்றி கால் நடையாக வந்தவர்கள் எத்தனைபேர். உங்களுக்குத்தான் தெரியுமே தம்பி,
அங்கு தொழில் செய்தவர்கள் எத்தனை பேர் சைக்கிலேளேயே ஒரு வாரம் பயணம் செய்து
ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
தம்பி! அத்தனை பேர்களில் ஒரு முஃமின் ((அல்லாஹ்வை) கடவுளை அஞ்சியவர்) இருந்திருக்கமாட்டாரா? அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே. இவர்களும் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறுதான் அன்று அவர்களும் இருந்தார்கள் என்ற உணர்வு வரவேண்டும் என்பதற்கான ஒரு பாடமாக இருக்கலாம்.
இருந்தாலும், நம்ம நாட்டிலே சமாதானம் நிலவனும், எல்லா மக்களும் ஒருவரையொருவர் முகமலர்ச்சியுடன் பேசனும். நிம்மதியாக வாழனும் என்று பிரார்த்திங்க.
………………………………????
ஹஸன்.
