தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) செல்வம் அடைக்கலநாதன் தடுப்புக்காவலில்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத்தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் கைது செயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுமுன்தினம் நாடு திரும்பியிருந்தார்.
அவரிடம் விமான நிலையப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் காலை விசாரணைக்காக அவரை அழைத்தனர். 8 மணிநேரம் நடைபெற்ற வசாரணைகளின் பின்னர் அவர் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மீண்டும் நேற்றுக் காலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் காலை 8 மணியளவில் அங்கு சென்றவேளை தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார் என அறியமுடிகின்றது.
வவுனியா ரெலோ அலுவலகத்தில் “மைக்ரோ பிஸ்ரல்” ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நீண்டகாலமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பதுங்கியிருந்த செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றோர் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்ற புலிகளின் கோஷத்துக்கு பக்கதுணையாய் இருந்ததுடன். மற்றைய தமிழ் அமைப்புக்களை துரோகிகள் என்று பறைசாற்றிவந்த இவ் கூத்தாடிகள்.
கடந்த மே 18ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட நிலையிலும், அவர் கொல்லப்பட்டவில்லை இவ்வாண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர் உரை நிகழ்த்துவார் என்று சிவாஜிலிங்கம் போன்றோர் ஊடகங்கள் ஊடாகவும், நெடுமாறன் போன்றோருடன் இணைந்து புலி ஆதரவு கூட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திவந்தனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு வருவதற்கு அஞ்சிய இவ் கூட்டத்தினர் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மட்டும் பதவியை தக்கவைப்பதற்காக அரசுடன் பேரம் பேசலில் ஈடுபட்டு இலங்கை வந்து சேர்ந்த இவர்களால், வன்னியில் மக்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது அவர்கள் நிற்கதியாகிய நிலையில் அரசுடன் பேரம் பேசி அவ்மக்களின் அவலத்தை போக்க முடியாத இந்த கூட்டத்தினர், தமது பதவிக்கு ஆபத்துவரும் அல்லது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் மட்டும் அரசுடன் பேரம்பேசி இவர்களால் கொழும்பு வரமுடிகின்றது. இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் இருந்து தமிழ்மக்களுக்கு என்ன பலனை நாம் அடைய முடிந்தது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசின் தடுப்புக்காவல் அல்லது விசாரணை என்பது எல்லாம் ஒர் கண்துடைப்பு. நேற்று முன்தினம் லண்டன் பி.பி.சி. தமிழோசைக்கு செவ்வி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் தன்னை கௌரவமாகவே அரச படையினர் விசாரணை செய்ததாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
