அன்று புலிகள் மண் மீட்பு நிதி வசூல்! இன்று ஈ.பி.டி.பி மண் மீளளிப்பு நிதி வசூல்!

November 7th, 2009 Save & Share

மீனவர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் பணவசூல். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேரூந்து ஒட்டுனர்கள், மீனவர்களிடம் நிதி அறவிட்டு வருவதாகவும், நிதியை பெற்றுக்கொண்டே அவர்களுக்கான அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதாகவும், இவ் நிதி வசூலிப்பு தினசரி இடம்பெற்று வருவதாக வடக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்ருது கொழும்புக்கு வருவதற்கு தனியொருவரிடம் மட்டும் 2000 ரூபா அறவிடப்படுகின்றது. அந்த கட்டணத்தை தற்போது 1100 ரூபாவாக குறைக்குமாறு பயணிகள் அமைச்சரிடம் கோரியுள்ளனர். இதுமட்டுமல்ல மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் யாழ் மீனவர்களிடமும் நிதிபெற்றுக்கொண்டே அவர்களுக்கான அனுமதிகளை அமைச்சர் பெற்று கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

முன்பு தமிழீழம் என்றும் மண்மீட்பு நிதி என்றும் அறவீடு செய்தனர் புலிகள், இன்று வடக்கில் ஜனநாயக மறுமலர்ச்சி என்றும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் ஈ.பி.டி.பி நிதியினை வசூலிப்பு செய்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன