யாழ். ஆஸ்பத்திரியை 3.5 பில்லியனில் அபிவிருத்தி செய்யத் திட்டம்-நிமல் சிறிபால டி சில்வா!

November 7th, 2009 Save & Share

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் சுகாதார சேவையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில், ரணவீர பத்திரன எம்.பி. எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், யாழ் போதனா ஆஸ்பத்திரி 3.5 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இதற்கு ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவி பெற்றுக் கொள் ளப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம், இம்மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்தவர்கள் தான் தாதியர் பதவிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஆனால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்தவர்கள் போதியளவில் இல்லை. அதனால் விஷேட திட்டத்தின் கீழ் க. பொ. த. உயர்தரத்தில் கலைப் பீடத்தில் சித்திய டைந்தவர்களை இவ்விரு மாகாணங்களில் தாதியர் பதவிக்குச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த அடிப்படையில் யாழ்ப்பாண தாதியர் கல்லூரிக்கு 400 பேரும், வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாதியர் கல்லூரிக்கு 150 பேரும், மட்டு தாதியர் கல்லூரிக்கு 400 பேரும் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு இப்பிரதேசங்களில் பணியாற்றவென 800 பேர் மருத்துவ மாதுகள் பதவிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை, இப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுக்கவென கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளுக்கென 285 டாக்டர்களும், வட மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு 123 டாக்டர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாகாணங்களின் சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளும்இ மனித வளத் துறையும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.