அவுஸ்திரேலியா செல்லமுற்பட்டபோது கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பேச்சாளர் அலெக்ஸ் ஆட்கடத்தும் முகவர்!
இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 255 சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பேச்சாளர் அலெக்ஸ் என்பவர் சட்டவிரோதமாக ஆட்கடத்தும் முகவர் என வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தோனேஷிய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டு ஜகார்த்தாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி பிறந்த ‘அலெக்ஸ்’ எனப்படும் குலேந்திரராஜா சஞ்ஜீவ், ‘கண்ணன் குழு’வைச் சேர்ந்தவர் என்றும், குழப்பம் விளைவித்தமை காரணமாக கடந்த 2003 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



