விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து நந்தன குணதிலக விலகல்!

November 5th, 2009 Save & Share

தேசிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக்க தனது கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் செயற்குழு கூட்டணியிலிருந்தும் இராஜிநாமா செய்வதாக, உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமை பீடத்துக்கு அறிவித்துள்ளதுடன் தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளைஇ அமைச்சர் நந்தன குணதிலக்கவின் பிரத்தியேக செயலாளரும் தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் விடுதலை முண்ணனியில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியுடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக பிரிந்துசென்று தேசிய சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.