அவுஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா 24மணி நேர காலக்கெடு!
November 5th, 2009
Save & Share
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு விடுத்துள்ளது. “இது அவுஸ்திரேலியாவின் பிரச்சினை.
எனவே நாளை வெள்ளிக்கிழமைக்கு இடையில் அவுஸ்திரேலியா இந்த சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்று இந்தோனேஷியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை “இந்தோனேஷியாவில் தடுத்துவைக் கப்பட்டிருக்கும் இந்த இலங்கையர்கள் எமது நாட்டிலிருந்து செல்ல வில்லை”என்று இலங்கைக் கடற்படை கூறுகின்றது.
