அமெரிக்காவுக்கான பயணத்தினை நிறைவு செய்து கொண்டு சரத் பொன்சேகா நாளைய தினம் நாடு திரும்புகின்றார்!

November 4th, 2009 Save & Share

அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னைநாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படைகளின் தளபதியுமான சரத் பொன்சேகா நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாதுகாப்பு செயலர் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த அரசு முயல்வதாகவும் தெரிவிக்கப்படும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலேயே அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் இவ் அறிவிப்பானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா ஜே.வி.பி.சார்பில் போட்டியிடுவாரோ என்ற ஜயப்பாட்டை தோற்றுவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேவேளை சரத் பொன்சேகா நாளையதினம் நாடுதிரும்பவுள்ள செய்தியை இராணுவ வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.