ஜனாதிபதி வன்னி விஜயம்! கிளிநொச்சி-முல்லை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், பாதுகாப்பு படையினருடன் ஜனாதிபதி சந்திப்பு!

November 4th, 2009 Save & Share

புலிகளின் முன்னைய கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஜனாதிபதி இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ தளபதி, ஜகத் ஜெயசூரிய, விமானப்படை தளபதி றோகான் குணதிலக, புதிய பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் தலைமையிலான குழுவினரே வன்னி சென்றனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றப்படும் மக்களையும் அவ் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். துணுக்காயில் அமைந்துள்ள 65வது படை தலைமையகத்திற்குள் கால்பதித்த ஜனாதிபதி அடங்கிய குழுவினரை மேஜர் ஜெனரல் அதுல்ல ஜயவர்தன, கிளிநொச்சி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, முல்லைத்தீவு மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி-முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்திற்கு சென்று படை அதிகாரிகள் மற்றும் படை சிப்பாய்களை சந்தித்து ஜனாதிபதி உரையாடியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.