சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த அரசு சதி- ஜோன் அமரதுங்க!
ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவார் என்று அஞ்சி அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த இந்த அரசு சதி செய்கிறது என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2010 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனரல் பொன்சேகா அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அரசு உள்ளது. அதன் காரணமாக அரசு அவருக்கு எதிராகச் சதி செய்கின்றது.
ஆனால்இ அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
இருந்தாலும் இந்நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்த வீரர் அவர். அப்படிப்பட்ட வீரருக்கு நாம் வீர வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். அவரை மதிக்கின்றோம். அவரைப் பாதுகாப்பது அரசினது மட்டுமல்ல எதிர்க்கட்சிகளினதும் பொறுப்பாகும்.
ஆனால்இ அரசு அவரது விடயம் தொடர்பில் மிகத் தவறாகச் செயற்படுகிறது. அவருக்கு அநீதி செய்கிறது. அவரை அவமதிக்கும் வகையில் இராணுவத் தளபதி பதவியில் இருந்து அவரை நீக்கியது. அவரை அமெரிக்காவிலேயே சிறைப்படுத்த இந்த அரசு சதித்திட்டம் தீட்டுகிறது என்றார் ஜோன் அமரதுங்க.
