வன்னி மக்களை பண்டிவிரிச்சானுக்கு அனுப்ப முடிவு!

November 2nd, 2009 Save & Share

நானாட்டான் சிறுக்கண்டல் நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களில் 09 குடும்பத்தைச் சேர்ந்த 38 பேர் வரை பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப இருப்பதாக மன்னாரில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கையில், “வன்னிப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளியில் எடுப்பதற்கு இவர்களது உறவினர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, அகதிகளில் சிலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சொந்த இடங்களிலேயே அவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

எனினும் நானாட்டான் சிறுகண்டல் நலன்புரி நிலையத்தில் பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த 09 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மன்னாருக்கு வர விண்ணப்பித்துள்ள போதும் இவர்கள் அனைவரையும் பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.