அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதி மக்கள் இன்றையதினம் மீள்குடியேற்றம்!
அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து யாழ்.மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் பொருட்டு இன்று திங்கட்கிழமை அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். மீளக் குடியமரும் வகையில் இந்த மக்கள் இன்று காலை 8 மணிக்கு யாழ். மத்திய கல்லூரிக்கு சமுகம் தருமாறு யாழ். அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார்.
மீளக் குடியமரும் மக்களை வேலணை பிரதேச செயலர் மு.நந்தகோபாலன், யாழ்.நகரில் இருந்து மண்கும்பானுக்கு அழைத்துச் செல்லுவார் என்று கூறப்பட்டது. மண்கும்பான் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கடற்படையினர் இவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.



