வவுனியாவில் கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் ஆறுபேர் பொலிஸாரால் கைது!

October 29th, 2009 Save & Share

வவுனியாவைச் சூழவுள்ள பகுதியில் மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் 6 சந்தேக நபர்களை வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியாப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக்கொள்ளை மற்றும் இரட்டைக்கொலை உள்ளிட்ட மேலும் ஒரு கொலைச் சம்பவத்துடன் இச்சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென வவுனியா உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் குறித்து, கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட சுமார் 60 சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் வவுனியா பொலிஸாரின் தலைமையின் கீழ் செயற்படும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுத்து வைக்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.