வடக்கு அபிவிருத்தியை துரிதப்படுத்த 2049 மில்லியன் ரூபாய் செலவில சீனாவிடம் இருந்து கனரக இயந்திரங்கள் அரசு கொள்முதல்!
வடக்கின் வசந்தம் வேலை திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக மேலம் பல கனரக இயந்திரங்களை சீனாவிடம் இருந்து 2049 மில்லியன் ரூபாய் கடனடிப்படையில் கொள்முதல் செய்துள்ளது. 180நாள் வேலைதிட்டத்தை துரிதப்படுத்துவதற்காக அரசு கொள்முதல் செய்த மேற்படி இயந்திரங்கள் இன்றையதினம் கொழும்பு காலிமுகத்திடலில் வைத்து சீனா தூதுவர் கையளித்தார்.
இந்த வைபவத்தில் வடக்கின் வசந்தம் செயலணி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, வடக்கின் ஆளுநர் மேயர் ஜெனரல் சந்திரசிறி, அமைச்சர் றிசாட் பதிய+தின், நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலர் அட்மிரல் வசந்த கருணாகொட, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.








