50 லட்சம் ரூபாய் பிணையில் லலித் கொத்தலாவல விடுதலை!
October 28th, 2009
Save & Share
செலிங்கோ குழும நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான லலித் கொத்தலாவலவை நீதிமன்றம் 50 லட்சம் ரூபா பிணையில் இன்று விடுதலை செய்துள்ளது. பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே நீதிமன்றம் இவரைப் பிணையில் விடுதலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்பட்ட தாமதமே தொடர்ச்சியாக அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருந்தமைக்குக் காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
