ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்தக் கூடிய சாத்தியம்-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் ஒரே நாளில் நடைபெறக் கூடிய சாத்தியமுள்ளதால் இத் தேர்தல்கள் இரண்டையும் எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, நவம்பர் மாதத்தில் நடை பெறவுள்ள சு.க வருடாந்த மாநாட்டின் போது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.
பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்களைத் தமது அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த சில சக்திகள் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. எனினும் ஜனாதிபதியே இதில் தலையிட்டு தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.



