கொழும்பு பாமன் கடையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு மீட்பு!

October 26th, 2009 Save & Share

பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 875 கிராம் எடையுள்ள சி-4 ரக அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்தி ருந்த சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப்புலனாய்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே வெடிமருந்துகள் மீட்டெடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட பொலிஸ் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வெள்ளவத்தை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். இவர் வழங்கிய தகவலையடுத்து இவரது நண்பரான மற்றுமொரு நபரை பாமன்கடை பகுதியில் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் போது இரு சந்தேக நபர்களும் வழங்கிய தகவல்களை அடுத்து இரண்டாவது சந்தேக நபர் தற்காலிகமாக தங்கியி ருந்த பாமன்கடை வீட்டின் முன் பகுதியில் இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.