ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அரசின் முடிவுக்கு எதிராக ஜே.வி.பி.ஆர்ப்பாட்ட பேரணி!

October 25th, 2009 Save & Share

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக ஜே. வி.பி. அறிவித்துள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தமது கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசு மீறுவதாகவும், அதைக் கண்டித்தே போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக ஜே.வி.பியின் பிரசாரச்செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் பேரணி கம்பல் பார்க்கில் இருந்து ஆரம்பித்து லிப்ரன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஹேரத் கூறினார். தனது ஆறுவருட ஆட்சிக் காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மஹிந்த ராஜ பக்ஷ அளித்த உறுதிமொழியை மீறி தேர்தல் நடத்த அனுமதிக்கப் போவதில்லை. என்றும் எதிராகதொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.