காலநிலை மாற்றம் தொடர்பாக ஜ.நா.பொதுசபையில் 13வயது இந்திய சிறுமி இன்றையதினம் உரை!
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்றையதினம் நடைபெறுகிறது. இவ் மகாநாட்டில் இந்தியாவின் லக்னோவை சேர்ந்த 13வயது சிறுமி உரை நிகழ்த்துகிறார். நியூயோர்க்கில் உள்ள ஜ.நா. பொதுச்சபையில் மகாநாடு நடைபெறுகிறது. ஜ.நா. பொது செயலர் பான்கி மூன் ஏற்பாடு செய்துள்ள இந்த மகாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 100க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மகாநாட்டில் லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் யுக்ரத்னா ஸ்ரீவர்சவா என்ற மாணவி உரை நிகழ்த்துகிறார். உலகில் உள்ள 300 கோடி குழந்தைகளின் சார்பாக இந்த மாணவி பேசுகிறார். இது குறித்து மாணவி யுக்ரத்னா தெரிவிக்கையில், அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகள் எதிர்காலத்தில், அந்நாட்டை பாதிக்கும். இப்போதே அவர்கள் மாற்று நடவடிக்கை எடுத்தால், எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை, அதிபர் ஒபாமாவிடம் சொல்ல உள்ளேன்.
நமது மூதாதையர்களிடம் இருந்து நாம் சிறப்பான ப+மியை பெற்றுள்ளோம். அந்த பசுமை நிறைந்த ப+மியை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மாசு படுத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கு நாம் ஒரு மோசமான ப+மியை தர உள்ளோம். அது சரியல்ல 300 கோடி இளம்; வயதினரின் கருத்துக்களை உலக தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களை புறக்கணிக்க முடியாது. இந்த ப+மியை, பசுமை நிறைந்ததாக மாற்றத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என யுக்ரத்னா தெரிவித்துள்ளார்.
