வவுனியா நகரசபை தலைவர் இன்றையதினம் பதவியேற்பு!
வவுனியா நகர சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ்.என்.ஜி.நாதன் இன்று பதவியேற்கிறார். கடந்தமாதம் 8ஆம் திகதி நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து நகரசபையின் ஆட் சியை கைப்பற்றியிருந்தது. இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொள்கிறார். நகரசபையின் உபதலைவராக தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற இளம் வேட்பாளரான மு.முகுந்தனும் இன்று பதவியேற்கிறார்.
இவ் பதவியேற்புக்காக நகரசபை தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தலைமையிலான தமிழ்கூட்டமைப்பு குழுவினர் வவுனியா நகர வர்த்தகர்களிடம் கப்பம் கோரியிருந்ததும், இதற்கு வவுனியா நகர வர்த்தகர்கள் சிலர் மறுப்பு தெரிவித்ததுடன். நலன்புரி முகாமில் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் வாடும் நிலையில் உங்களுக்கு பதவியேற்பு ஆடம்பரம் வேண்டுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்ததாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
