முதலமைச்சர் சந்திரகாந்தன் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சோபியா மக்ரன்சி, இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்தும் மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் ஸ்டீபன் பொஸ்டர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஜனநாயக நீரோட்டம், அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள், கிழக்கு மாகாணத்தின் சிவில் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துக்கைளப் பரிமாறிக் கொண்டனர் என முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.
