அதி உயர் பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை-யாழ் அரச அதிபர்!
அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடத்தினால் தெல்லிப்பளை, உடுவில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை, கோப்பாய், உடுவில் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை, கோப்பாய், உடுவில் பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன அவற்றில் முதற்கட்டமாக அந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ள அரச அதிபர். குடாநாட்டின் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் குறித்து தகவல் தருகையில், இந்த மாதம் மட்டும் குடாநாட்டில் 1,500 குடும்பங்களை சேர்ந்த 4601பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
நலன்புரி நிலையங்களில் இருந்து கடந்த ஜந்தாம் திகதி 1.067 குடும்பங்களை சேர்ந்த 3,220 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். நேற்றும் 154 குடும்பங்களை சேர்ந்த 465 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
