Archive for January, 2012

நேற்று முதல் முழுஉண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்க் கைதி : சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தகவல்!

January 28th, 2012

மூன்றரை வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த தேவதாசன் கனகசபை (வயது 55 ) என்ற கைதி தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த 49 தினங்களாக தேநீரையும் நீரையும் மாத்திரம் பருகி போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் 50 ஆவது நாளான நேற்று முதல் களுத்துறை சிறைச்சாலையில் முழுமையான உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

மொழிப்போரில் மொத்த தமிழரும் குதிப்போம் இறுதி இலக்கை நிச்சயம் எட்டுவோம் : கருணாநிதி சூளுரை!

January 27th, 2012

மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம். இறுதி இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சூளுரைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகள் அவல நிலையில்!

January 27th, 2012

கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-காத்தான்குடி இ.போ.ச. பஸ்ஸில் சடலமாக ஒருவர் மீட்பு!

January 27th, 2012

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் இன்று காலை ஒருவர் சடலமாக இருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. கல்லாற்றைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை, காத்தான்குடிச் சாலை முகாமையாளர் ஏ.எல்.பழுலுல்லாஹ் தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர் : அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

January 27th, 2012

சிறைச்சாலை உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் : டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன!

January 27th, 2012

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தமிழ்க்கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழுக்குத் துரோகம் இழைத்துவிட்டோம் : அமைச்சர் டலஸ் அழகபெரும!

January 27th, 2012

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரத்துக்கு தெரிவுக் குழு மூலமே விடை : அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

January 27th, 2012

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு காணி அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. இதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாகவே விடை காணப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் நாட்டில் நடைமுறைப்படுத்தினால் புதிய பிரச்சினைகளே உருவாகும்.

மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்தமை : பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு விளக்கமறியல்!

January 27th, 2012

பகிடிவதை சம்பவமொன்று குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இவர்களுக்கு விளக்கமறியல்உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அதிக அக்கறை காட்டுகிறது இந்தியா; நேற்றுமுன்தினம் ஹிலாரியைச் சந்தித்த நிருபமா நேரில் தெரிவிப்பு!

January 27th, 2012

இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.