Archive for 'செய்திகள்' Category

அனுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்!

September 28th, 2009

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

கடற்புலிகள் பிரிவை பலப்படுத்த உக்ரைன் நிபுணர்கள் உதவியமை புலிகளின் கே.பி. மூலம் அம்பலம்!

September 28th, 2009

புலிகள் தமது கடல் புலிகள் பிரிவை பலப்படுத்துவதற்காக உக்ரைன் நாட்டு நிபுணர்களை வன்னிக்கு அழைத்து வந்துள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. 2002-2004 சமாதான காலத்தில் உக்ரைன் நாட்டு நிபுணர்கள் வன்னிக்கு வந்து கடற்புலிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

சகல மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் அரசியல் தீர்வு விரைவில் முன்வைக்கப்படும்- ஜ.நா சபையின் 64வது அமர்வில்!

September 28th, 2009

மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

புத்தளத்தில் சி-4 வெடிமருந்து மீட்பு!

September 27th, 2009

புத்தளம்-பழைய மன்னார் வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சி-4 வெடிமருந்தினை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஜ.ஜி.நிமால் மெடிவகே தெரிவித்துள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரமே 750 கிராம் நிறையுடைய சி-4 வெடிமருந்தினை இன்றையதினம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்காக 100க்கு மேற்பட்ட கனரக இயந்திரங்கள் கொள்வனவு!

September 27th, 2009

வடக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்காக 2,353 மில்லியன் ரூபாய் பெறுமதியான டோசர்கள், றோலர்கள் உட்பட்ட மேலும் பல கனரக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இராணுவத்தினரிடம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி இயந்திரங்கள் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ள வடக்கின் வீதிகள், குளங்களை புனரமைப்பதற்கு பாவிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலரும் வடக்கு அபிவிருத்தி குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேச நிர்மாண அமைச்சரின் இணைப்பு செயலாளரான ஸ்ரீரஞ்சன் வெள்ளைவானில் கடத்தல்!

September 27th, 2009

தேச நிர்மான அமைச்சர் சுஸந்த புஞ்சிநிலமேயின் இணைப்பு செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீரஞ்சன் வவுனியாவில் வைத்து வெள்ளவானில் கடத்தப்பட்டுள்ளார். முன்னைநாள் ரெலோ உறுப்பினரான இவர் சமீபத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் இணைந்தார். அதன் பின்னர் அமைச்சரின் இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த ஸ்ரீரஞ்சன்.

இந்திய தூதுவர் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்!

September 27th, 2009

இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் வவுனியாவில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்க நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டு அங்கே தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலமையினை பார்வையிட்டார். மேற்படி மக்களின் நிலை தொடர்பாக புதுடில்லி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையிலேயே அலோக் பிரசாத் வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் நிலையினை பார்வையிட்டுள்ளார்.

கூட்டுப்படை தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பதவி விலக முடிவு!

September 27th, 2009

முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலக முயற்சி. தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 25ம் திகதி அனுப்பி வைத்தபோதும் புத்த பிக்குகள் சிலரது ஆலோசனையின் பிரகாரம் பதவி விலகும் தனது முடிவை சரத்பொன்சேகா தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இடைத்தங்கல் முகாம் மக்கள் பற்றி ஹிலாரி-கிருஷ்னா பேச்சு!

September 26th, 2009

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்கள் நிலை குறித்து அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்னா ஆகிய இருவருக்குமிடையே இலங்கை நிலமை தொடர்பாக நியுயோர்க்கில் பேச்சு இடம்பெற்றுள்ளது.

தயா மாஸ்ரர்-ஜோர்ஜ் மீதான விசாரணை தொடரும்-புலனாய்வு பிரிவு!

September 26th, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களாகக் கருதப்படும் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரது நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடரும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்களா என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.