Archive for 'செய்திகள்' Category

மூன்றாவது பாலினமாக திருநங்கைகள் : இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

April 15th, 2014

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.திருநங்கைகளுக்கு தனி அடையாளத்தை அளிக்கும் வகையில் சம உரிமை அளித்து அவர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கக் கோரி தேசிய சட்ட உதவி ஆணையம் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம், நிஷா பிஸ்வால் பேச்சு!

April 15th, 2014

அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு இடையில் இலங்கை விடயம் தொடர்பில் கருத்து பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பிஸ்வால் கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கோபியின் தாய் உட்படப் பத்துப் பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விடுதலை!

April 15th, 2014

இராணுவத்தினரால் தேடப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் உட்படப் பத்துப் பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களுடன் சேர்த்து இதுவரையில் 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டுப் பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சர்வதேச மத்தியஸ்ததுடன் த.தே.கூ.வுடன் பேசும்போதே உண்மையான சமாதானம் ஏற்படும் : அரியநேத்திரன்

April 15th, 2014

இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழர் மீதான புதிய கெடுபிடி அரசியல் முயற்சிகளை சிங்கள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்:சரத் பொன்சேகாவிடம் மனோ கணேசன் எடுத்துரைப்பு!

April 15th, 2014

புலிகள் மீண்டு உயிர் பெற்று வருகிறார்கள் என்று கூறி தமிழ் மக்கள் மீது புதிய போலிஸ்-படைத்தரப்பு கெடுபிடிகளை முன்னெடுக்கும் முயற்சிகள் தென்படுகின்றன. இந்த முயற்சிகளின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் கட்சி அரசியலை சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

காமன்வெல்த்துக்கு நிதியளிப்பதை இடை நிறுத்தியது கனடா!

April 15th, 2014

காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை வகிக்கும் காலகட்டத்தில் இந்த அமைப்பின் செயலகத்துக்கு வழங்கிவரும் தன் பங்கு நிதியை இடை நிறுத்தி வைக்கப்போவதாக கனடா அறிவித்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

April 15th, 2014

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவராவார்.

கலட்டியில் குடைசாய்ந்தது தேர்-ஆலயத்தின் பிரதம குரு படுகாயம் : புத்தாண்டில் சோகம்!

April 14th, 2014

யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா சற்றுமுன்னர் இடம்பெற்றது. அதில் தேர் இழுத்துவரும் போது தேர்குடை சாய்ந்தது. இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆலயத்தின் பிரதம குரு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு முன் சாட்சியமளித்தால் தண்டிக்கப்படுவீர்கள் : அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கிறார்!

April 14th, 2014

அமெரிக்கா சர்வதேச பொலிஸ்காரனாக செயற்பட்டு வருவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஜெனீவா மாநாட்டினை அடுத்து அமெரிக்கா கொண்டு வந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் இலங்கை தொடர்பில் விரைவில் நிபுணர்குழு ஒன்றின் மூலம் விசாரணை என பேசப்பட்டுவரும் நிலையில் இந்தக் கருத்தினை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : இலங்கை அரசு!

April 14th, 2014

பிரிட்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று கூறியுள்ளது இலங்கை அரசு. மனித உரிமை நிலைமைகள் மோசமாக உள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையை மீண்டும் இணைத்துள்ளது பிரிட்டன். அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய செயற்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளது.